தமிழ்நாடு (Tamil Nadu)

கவர்னர் பங்கேற்ற பல்கலை விழாவில் முழுவதுமாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

Published On 2024-10-19 07:17 GMT   |   Update On 2024-10-19 07:19 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
  • இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார்.

தஞ்சை:

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.

'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.

இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், தஞ்சையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதுமாக பாடப்பட்டுள்ளது.

இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து துல்லியமாக பாடப்பட்டது.

Tags:    

Similar News