தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா... விஜய் வருகை

Published On 2024-06-28 02:13 GMT   |   Update On 2024-06-28 02:13 GMT
  • போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அரங்கிற்கு முன்கூட்டியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது.

இதனால் விழா நடைபெறும் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் அதிகாலையிலேயே வந்தடைந்தார். மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அரங்கிற்கு முன்கூட்டியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாணவர்கள் பாராட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் பேசிய பின்னர் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்துள்ளார்கள். மாணவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News