தமிழ்நாடு

வந்தவாசியில் இறந்த குரங்கை நல்லடக்கம் செய்த கிராம மக்கள்

Published On 2023-09-20 06:27 GMT   |   Update On 2023-09-20 06:27 GMT
  • குரங்கு இறந்த தகவலை அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தெரிவித்தனர்.
  • குரங்கை புதைத்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் வசித்து வரும் விநாயகம் என்பவரின் வீட்டின் முன்பு வயது முதிர்ந்த பெண் குரங்கு ஒன்று மூச்சு திணறியப்படி சோர்ந்து அமர்ந்து இருந்ததை பார்த்தனர்.

உடனே சோர்வுடன் இருந்த குரங்குக்கு தண்ணீர் மற்றும் பழங்கள் கொடுத்தனர். இருப்பினும் அந்த குரங்கு சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டது.

குரங்கு இறந்த தகவலை அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தெரிவித்தனர். ஓய்வு பெற்ற தாசில்தார் உலகநாதன், விலங்கு நல ஆர்வலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய கிராம இளைஞர்கள் அந்தக் குரங்கிற்கு இறுதிச் சடங்கை செய்வதற்காக இடம் தேட முடிவு செய்தனர்.

அதற்குள் இறந்த குரங்கு உடல் கெடாமல் இருக்க பிரிசர் பாக்ஸில் வைத்து பதப்படுத்தினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் குரங்கின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்பு மேளதாளம் முழங்கி, தேவாரம் பாடி வழி நெடுகிலும் மலர்கள் தூவி மனிதர்களை அடக்கம் செய்வது போன்று குரங்கின் உடலை தோளில் சுமந்து சென்றனர். தொடர்ந்து முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

சென்னாவரம் கிராமத்தின் இளைஞர்களின் செயலை வந்தவாசி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் குரங்கை புதைத்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News