தமிழ்நாடு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் (நடுவில் இருப்பவர்) தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடிய காட்சி.

திருப்பூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் தீர்த்தக்குடம் ஏந்தி நடனமாடிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

Published On 2023-01-03 05:53 GMT   |   Update On 2023-01-03 05:53 GMT
  • பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
  • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு, தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி சென்றார்.

திருப்பூர்:

திருப்பூர் அங்கேரிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவையொட்டி அவினாசி அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு, தலையில் தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தி பரவசத்துடன் நடனமாடியபடி சென்றார். இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News