சீமான் பேச்சுக்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
- பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
- கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள்.
மாமல்லபுரம்:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஆவேசமாக ஒருவர் பேசுவதால் தலைவர் ஆகிவிட முடியாது. இந்த ஆவேசமான நாடக அரசியல் பேச்சையும், மூளைச்சலவை வீடியோக்களையும் தற்போது இளைஞர்கள் அதிகளவில் பொபைல் போன்களில் பார்த்து வருகிறார்கள். இது ஆபத்தானது இதற்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது.
கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள். அப்போதுதான் அவர் இளைஞர்களுக்கு செய்த நலத்திட்டங்கள் உங்களுக்கு தெரியவரும் என்று பேசினார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், ஒன்றிய கழக செயலாளர் தமிழ்மணி, ஆர்.டி.அரசு, இளங்கோ, மாமல்லபுரம் வெ.விசுவநாதன், அரவிந்த் சம்பத்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.