தமிழ்நாடு

குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

Published On 2023-03-24 12:30 GMT   |   Update On 2023-03-24 12:30 GMT
  • தேர்வு முடிந்து 8 மாதம் ஆகியும் முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது.
  • கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது.

சென்னை:

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை 8 மாதமாகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது.

சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி இன்று பிற்பகல் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேடுவதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. நேரம் செல்லச் செல்ல இணையதளத்தின் வேகம் சீரடைந்து தேர்வு முடிவுகளை எளிதாக பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தேர்வு முடிவுகளை அறிய கிளிக் செய்க: https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

Tags:    

Similar News