பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 56 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
- கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வைகை அணையில் தண்ணீர் தேக்க முடிவு செய்யப்பட்டது.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழையின்போது முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. அதனைதொடர்ந்து மழைப்பொழிவு இல்லாததாலும், கூடுதல் தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
இந்நிலையில் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வைகை அணையில் தண்ணீர் தேக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி குடிநீருக்கு மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 55.81 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 531 கனஅடிநீர் வருகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. 756 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. 37 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.