தமிழ்நாடு
தமிழகத்தை தன்னிறைவு பெறச் செய்தவர் காமராஜர்- டாக்டர் வி.ஜி.சந்தோசம் புகழாரம்
- ‘காமராஜர் என்றாலே கல்வி’ என்ற நினைவு நமக்கு வரும்.
- கர்மவீரா் காமராஜரை ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்று மக்கள் புகழ்ந்து போற்றினர்.
சென்னை:
தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
'காமராஜர் என்றாலே கல்வி' என்ற நினைவு நமக்கு வரும். காரணம், அவா் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே கிராமங்களுக்கும் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்று, அதற்கு நல்ல திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்தி வெற்றி கண்டார்.
அதனால், கர்மவீரா் காமராஜரை 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என்று மக்கள் புகழ்ந்து போற்றினர். காமராஜர், கல்விக்கு மட்டுமல்ல, தொழில் துறைக்கும், வேளாண்மைக்கும் தனது திட்டங்களால் தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர்த்தினார். அத்தகைய புகழ்மிக்க தலைவர் காமராஜரை நினைவு கூர்வது நமது கடமையாகும். சிந்தனை சிற்பி செயல்வீரா் காமராஜர் புகழ் ஓங்குகவே!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.