வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்
- வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வெள்ளையன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓ. பன்னீர்செல்வம், சரத்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமாரி எம்.பி. விஜய் வசந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதவியில், "வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
வணிகர்களின் நலனுக்காக உழைத்து, வணிகர் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்திய திரு. வெள்ளையன் அவர்கள் மறைவு வணிகர் சமூகத்திற்கு தீரா இழப்பாகும்.
அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் அனைவரது துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.