"லூலூ மால்" சென்னையில் திறக்க விடமாட்டோம்: விக்கிரமராஜா பேட்டி
- சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.
- வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காமல் கணிகாணிப்பதாக கூறினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி ஐடியல் பீச் ரிசார்ட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட "லூலூ மால்" ஹைப்பர் மார்க்கெட், அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திறக்கும் நிலையில், சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அடுத்து சென்னையில் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
மேலும், வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.