தமிழ்நாடு

அனுக்கூர் அஞ்சலகத்தில் முறைகேடு: பெண் அலுவலர் சஸ்பெண்டு

Published On 2023-12-06 04:25 GMT   |   Update On 2023-12-06 04:25 GMT
  • தொடர் வைப்பு நிதி கணக்குகள் மட்டும் சுமார் 1,500 உள்ளன.
  • அஞ்சல் அலுவலர் நித்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அனுக்கூர் கிராம அஞ்சல் கிளை அலுவலகத்தில், அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா.

இந்த அலுவலகத்தில் அனுக்கூர், அனுக்கூர் குடிகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் அஞ்சலக சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீடு தொகை செலுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்துள்ளனர். இதில் தொடர் வைப்பு நிதி கணக்குகள் மட்டும் சுமார் 1,500 உள்ளன.

இந்நிலையில் அஞ்சல் அலுவலர் நித்யா, பொதுமக்கள் பலர் அஞ்சலகத்தில் செலுத்தும் பணத்தை அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அஞ்சல்துறை உயரதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அஞ்சல் அலுவலர் நித்யா சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் அனுக்கூர் அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை, அஞ்சல் துறை அதிகாரிகள் சந்தித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News