தமிழ்நாடு

உற்சாகமாக நடனமாடிய பெண்கள்.

பாரம்பரிய கும்மி நடனம் ஆடிய பெண்கள்- இளைஞர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Published On 2023-07-16 05:13 GMT   |   Update On 2023-07-16 05:13 GMT
  • மீண்டும் புத்துயிர் அளித்து கும்மி ஆட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • கும்மியாட்டத்தின் போது அம்மன், முருகன்-வள்ளி புகழ்பாடியும், புராண கதைகளை பாடியும் கும்மியாட்டம் நடைபெறுகிறது .

பழனி:

பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு கும்மி ஆட்டம் பயிற்சி அளித்து வந்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீ பவன் கலைக்குழுவின் சார்பில் கும்மி நடனம் அரேங்கேற்றம் நிகழ்ச்சி சின்னகலையம்புத்தூரில் நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர். இசைக்கு ஏற்றபடி கிராமிய பாடல் பாடியும், மேளஇசைக்கு ஏற்ப ஒரே மாதிரியான ஆடை அணிந்து கும்மி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கிராமங்களில் பாரம்பரியமாக ஆடப்படும் கும்மி ஆட்டம் தற்போது மெல்ல மறைந்து வந்த நிலையில் மீண்டும் புத்துயிர் அளித்து கும்மி ஆட்டத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிராமம் தோறும் சென்று மக்களை ஒன்றிணைத்து கும்மி பாடல்கள், கும்மி ஆட்டத்தை கற்றுக் கொடுக்கும் இளைஞர்கள் அரங்கேற்றத்தை நடத்தி ஊக்கப்படுத்தி வருகின்றனர். கும்மியாட்டத்தின் போது அம்மன், முருகன்-வள்ளி புகழ்பாடியும், புராண கதைகளை பாடியும் கும்மியாட்டம் நடைபெறுகிறது . கும்மியாட்டத்தை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஆடுவதால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. பலரும் ஆர்வமாக கலந்துகொண்டு கும்பி ஆட்டம் ஆடுவது நமது பாரம்பரிய கலை கால ஓட்டத்தில் மறைவதை தடுக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள். அழியும் நிலையில் இருந்த தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி நடனத்தை மீட்கும் இளைஞர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News