தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் இந்த தேதிகளில் முகாம்களுக்கு செல்ல வேண்டாம்

Published On 2023-08-12 05:52 GMT   |   Update On 2023-08-12 05:54 GMT
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 16-ந்தேதியுடன் முகாம்கள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. 2-ம் கட்ட முகாம்கள் இப்போது நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் விடுபட்டவர்களின் வசதிக்காக வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும். எனவே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது.

இதற்குப் பதிலாக தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் இடங்களில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெறக்கூடிய முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News