பிரதமர் மோடி உருவத்தை பனை ஓலையால் செய்து அசத்திய தொழிலாளி
- பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பா.ஜனதா கட்சியினரால் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- கருங்குளத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முழு உருவத்தை பனை ஓலையால் செய்து உள்ளார்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. பனை தொழிலாளியான இவர் தற்போது பனை ஓலையில் பல்வேறு பொருட்களை செய்து அசத்தி வருகிறார்.
குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி உருவத்தையும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உருவத்தையும் பனை ஓலையில் செய்து அசத்தி உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பா.ஜனதா கட்சியினரால் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக பல்வேறு பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
இதற்கிடையே கருங்குளத்தைச் சேர்ந்த பனைத்தொழிலாளி பால்பாண்டி தனது வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முழு உருவத்தை பனை ஓலையால் செய்து உள்ளார். அவருக்கு கண்ணாடி அணிவித்தும், சட்டை, பேண்ட் அணிந்து தத்ரூபமாக அவரது உருவத்தை வடிவமைத்து உள்ளார்.
இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் அவரது உருவத்தை பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள்.