தமிழ்நாடு

யாசகர் பாண்டியன்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய யாசகர்

Published On 2023-04-24 11:13 GMT   |   Update On 2023-04-24 11:13 GMT
  • கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தருவதை கடமையாக செய்து வருகிறார்.
  • மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன்.

கோவை:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது79). இவர் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார்.

யாசகம் பெறும் பணத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணத்தை வழங்குவதையும், கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தருவதை கடமையாக செய்து வருகிறார்.

இந்நிலையில் யாசகரான பூல்பாண்டியன் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கினார்.

இதனை தொடர்ந்து யாசகர் பாண்டியனை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பாராட்டினார். இது குறித்து யாசகரான பாண்டியன் கூறியதாவது:-

மும்பை செம்பூரில் வசித்து வந்த நான் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, யாசகம் பெற்று பிழைப்பு நடத்த தொடங்கினேன். இந்த யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இதனை எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உபகரணங்கள் வாங்கிக்கொள்ள நிதி உதவியாக அளித்தேன். இதுவரை 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளேன். மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன். இதில் தான் எனக்கு பெரும் நிம்மதி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News