இந்த 3 நாள் ரெடியா இருங்க.. தமிழகத்தில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம்
- இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- 13, 14, 15-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 13-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-ந் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
13, 14, 15-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.