தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியர் முடிவு செய்யலாம்

Published On 2024-11-21 02:39 GMT   |   Update On 2024-11-21 02:39 GMT
  • தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை இடைவிடாது கனமழை கொட்டியது. குறிப்பாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இந்த மழை அவ்வப்போது சாரல் மழையாகவும், திடீரென கனமழையாகவும் என மாறி மாறி பெய்து கொண்டே இருந்தது.

நேற்று திடீரென ராமேசுவரத்தில் அதிகனமழை பெய்யத்தொடங்கியது. இந்த கனமழை ராமேசுவரம் நகர சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

ராமேசுவரத்தில் மேக வெடிப்பு காரணமாகவும், அதிகனமழையாலும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை என 10 மணி நேரத்தில் மட்டும் சுமார் 411 மில்லி மீட்டர் மழை (41.1 சென்டி மீட்டர்) பதிவாகியது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும்.

கனமழை காரணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுமுறை அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News