தமிழ்நாடு

மதுரை விமான நிலைய விரிவாக்கம்- கிராம மக்கள் போராட்டம் வாபஸ்

Published On 2024-11-20 11:31 GMT   |   Update On 2024-11-20 11:31 GMT
  • மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்.
  • மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தங்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை முயற்சியை மேற்கொள்வோம் என சின்ன உடைப்பு மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

சட்ட விதிகளை பின்பற்றி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என நீதிபதி மாலா உத்தரவிட்டுள்ளார்.

மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை கையகப்படுத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சின்ன உடைப்பு கிராம போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News