தமிழ்நாடு
மழை பாதிப்பு சீரமைப்பு பணி- பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
- மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்க உத்தரவு.
- மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.