தமிழகத்தில் 17-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
- காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.
- சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் அருகே நிலவுவதால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 17-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கேரளா மாஹேவில் நாளை முதல் 17-ந்தேதி வரை கனமழை பெய்யும். கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் பகுதியில் இன்று முதல் 14-ந்தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.