கமலா ஹாரிஸ் தோல்வி கஷ்டமா இருக்கு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் வேதனை
- டொனால்டு டிரம்ப் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று காலை நடைபெற்று முடிந்தது. உடனே வாக்குகளை எண்ணும் பணிகள் துவங்கின. அமெரிக்காவில் அதிபர் பதவியை பெற வேட்பாளர் குறைந்தபட்சம் 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முன்னணியில் இருந்து வந்த குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை வென்றுள்ளார்.
வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக அவரது பூர்விக கிராமமான திருவாரூர் மாவட்டத்தை அடுத்த துளசேந்திரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அவரது பூர்விக கிராமத்தில் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.