தமிழ்நாடு

காரியாபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2024-10-30 10:33 GMT   |   Update On 2024-10-30 10:35 GMT
  • இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம், சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம், 11 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு காரியாட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சி ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News