தமிழ்நாடு
கிண்டி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
- ஐசியுவிற்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.
- மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்
சென்னை:
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும். அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்
இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்