விசாரணை சி.பி.ஐ.-க்கு மாற்றம்- மனசாட்சியை அடகுவைத்துவிட்டு இ.பி.எஸ். அறிக்கை என ஆர்.எஸ்.பாரதி சாடல்
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேடு.
- கொடநாடு கொலை கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டதை வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
* ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் சென்ற இபிஎஸ் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை வெளியிடுகிறார்.
* சிபிஐ விசாரணைக்கு தடை கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது என யோக்கியனை போன்று பேசுகிறார் இபிஎஸ்.
* தனக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு இபிஎஸ் போனது ஏன்?
* கண்டெய்னரில் பணம் கைப்பற்றிய விவகாரத்தில் சிபிஐ இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
* கண்டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது யாருடையது என்று இன்று வரை தெரியவில்லை.
* கள்ளக்குறிச்சி வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
* தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை என்பதை இபிஎஸ் அறிய வேண்டும்.
* கண்டெய்னரில் பணம் கைப்பற்றிய விவகாரத்தில் சிபிஐ இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
* தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கேடு.
* கொடநாடு கொலை கொள்ளை நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.
* தஞ்சையில் நடந்த கொலையை வைத்து கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பேசுவது நியாயமல்ல.
* ஆசிரியர் கொலை சம்பவம், காதல் விவகாரம் காரணமாக நடந்துள்ளது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* அதிமுக ஆட்சியில் நடந்த ஆசிரியர்கள் கொலைகளை பட்டியலிட்டு அவர் பேசினார்.