தமிழ்நாடு

வரும் ஜனவரி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

Published On 2024-11-13 11:56 GMT   |   Update On 2024-11-13 11:56 GMT
  • ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.
  • உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது," வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், "வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்" என்றார்.

இத்திட்டத்தின் மூலம் 1.16 கோடி பெண்கள் மாதந்தோறும் உரிமைத் தொகை பெறுகின்றனர். இதில் தகுதி இருந்தும் பலருக்கு ரூ.1,000 கிடைக்கவில்லை என புகார் எழுந்த நிலையில், அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News