தமிழ்நாடு

இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

Published On 2024-11-20 04:24 GMT   |   Update On 2024-11-20 04:24 GMT
  • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
  • ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வந்ததை பார்க்க முடிந்தது.

கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17-ந் தேதி ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இடைபட்ட 17 நாட்களில் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 600 வரை குறைந்திருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு பிறகு, போர் பதற்றம் சற்று குறைவதாக தெரிந்த நிலையில், தங்கம் விலை குறைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் விலை ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 995-க்கும், ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது.



வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520

18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

17-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

16-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

15-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

19-11-2024- ஒரு கிராம் ரூ. 101

18-11-2024- ஒரு கிராம் ரூ. 99

17-11-2024- ஒரு கிராம் ரூ. 99

16-11-2024- ஒரு கிராம் ரூ. 99

15-11-2024- ஒரு கிராம் ரூ. 99

Tags:    

Similar News