தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழையினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-11-17 05:21 GMT   |   Update On 2024-11-17 05:21 GMT
  • உபரி நீர் பிலிகுண்டுலு பகுதியை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் 124.80 அடி உயரம் உள்ள கே.ஆர்.எஸ். அணை மற்றும் 84 அடி உயரம் கொண்ட கபினி அணை ஆகியவற்றிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த உபரி நீர் பிலிகுண்டுலு பகுதியை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,084 கன அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 9,154 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 106.51 அடியாகவும், நீர் இருப்பு 73.53 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 3000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News