தமிழ்நாடு (Tamil Nadu)

தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2024-10-23 11:36 GMT   |   Update On 2024-10-23 11:36 GMT
  • தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்.
  • தாம்பரம்- நெல்லை இடையே நவம்பர் 4-ந்தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி, சென்ட்ரல்-செங்கோட்டை, சென்ட்ரல்-மங்களூரு, தாம்பரம்-கன்னியாகுமரி, கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, நெல்லை- தாம்பரம் இடையே நவம்பர் 3-ந்தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவம்பர் 4-ந்தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 

Tags:    

Similar News