மீண்டும் பார்க்கிங் ஆகும் வேளச்சேரி மேம்பாலம்
- சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
- கடந்த ஆண்டு மழை பெய்த போது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் முன்னெச்சரிகையை நடவடிக்கையை மக்கள் எடுத்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெங்கல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மழை பெய்த போது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் முன்னெச்சரிகையை நடவடிக்கையை மக்கள் எடுத்து வருகின்றனர்.