தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2024-11-30 02:09 GMT   |   Update On 2024-11-30 02:10 GMT
  • பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கண்ணாமூச்சி காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெங்கல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காரைக்கால், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளில் பரலாவக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News