தமிழ்நாடு

அச்சுறுத்தும் புயல் - தீவிர மழையை கொடுக்கக்கூடிய மேகங்கள் சென்னையை நெருங்குகின்றன

Published On 2024-11-30 01:05 GMT   |   Update On 2024-11-30 01:05 GMT
  • சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.
  • புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

ஃ பெங்கல் புயல்இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

மேலும் ஃபெங்கல் புயல் எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (30.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபெங்கல் புயல் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News