தமிழ்நாடு

கனமழை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் என்னென்ன?

Published On 2024-11-27 00:13 GMT   |   Update On 2024-11-27 01:36 GMT
  • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை:

வடக்கிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொடைக்கானல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News