தமிழ்நாடு
நாகையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
- சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 670 கி.மீட்டர் தொலைவில் நிலவுகிறது.
- புதுவையில் இருந்து 580 கி.மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது.
சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 670 கி.மீட்டர் தொலைவில் நிலவுகிறது. நாகையில் இருந்து தென்கிழக்கே 470 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 580 கி.மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இலங்கையின் திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே 190 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
அடுத்த 2 நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு- இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவரித்துள்ளது.