உலகம்

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி- 3 பேர் காயம்

Published On 2024-11-09 01:17 GMT   |   Update On 2024-11-09 01:17 GMT
  • காரில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
  • கொலை செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே கிரிமினல் குரூப் மிரட்டல் விடுத்ததாக போலீசார் தகவல்.

பிரேசில் நாட்டின் மிப்பெரிய விமானம் குவாருல்கோஸில் உள்ள சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர் திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்கும் புகுந்து சரிமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என போலீசார் கண்டறிந்ததுள்னர். இவருக்கு சர்வதேச கிரிமினல் குரூப் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்.

இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் 2 பேர் ஈடுபட்டதாக தெரிகிறது. டெர்மினல் இரண்டில் ஒருவர் குண்டு பாய்ந்த கீழே விழுவது போல் தெரிகிறது. இந்த டெர்மினல் உள்ளூர் விமான போக்குவரத்திற்காக பயன்படும்.

Tags:    

Similar News