இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க.. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் ராமர் பாலம்
- ராமாயணத்தில் ராமரின் வானரப் படையினர் ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
- ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து ராமாயணக் கதையை கூறுகிறார்.
இதிகாசமான ராமாயணத்தில், சீதையை ராமன் மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய ராமரின் வானரப் படையினர் ராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் ராமர் பாலம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது இந்திய மக்களை கவர்ந்துள்ளது.
5 நிமிட விளம்பர வீடியோவில் ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து ராமாயணக் கதையை கூறுகிறார்.
அந்த வீடியோவில், சீதையை கடத்திச் சென்ற அசுர மன்னன் ராவணன் அவளை எங்கே அழைத்துச் சென்றான் என்று அந்த குழந்தை கேட்க, ராமாயணத்தில் உள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை என்று அந்த பாட்டி தனது பேரனிடம் விவரிக்கிறாள்.
ராவணன் குகை, சீதா அம்மன் கோவில், ராமர் பாலம் உள்ளிட்ட இடங்களை பற்றி தனது பேரனிடம் பாட்டி விவரிக்க, "ராமர் பாலம் இப்போதும் இருக்கிறதா?" என ஒரு குழந்தை கேட்கிறார். அதற்கு "ஆமாம் அதை இன்றும் பார்க்கலாம்" என பாட்டி பதிலளிப்பதும்.
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த விளம்பர வீடியோ உருவாகியுள்ளது. வடஇந்தியாவில் உள்ள இந்து மக்களிடையே இந்த விளம்பர வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.