உலகம்

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய டொனால்டு டிரம்ப்

Published On 2024-11-13 03:07 GMT   |   Update On 2024-11-13 03:07 GMT
  • எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் அடிப்படையில் தொழிலதிபர்களாக உள்ளனர்.
  • விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோர் அந்த நாட்டின் செயல்திறன் துறையை (Department of Government Efficiency or DOGE) வழி நடத்துவார்கள் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் அடிப்படையில் தொழிலதிபர்களாக உள்ளனர். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். அதேபோல் விவேக் ராமசாமியும் தொழிலதிபராக இருந்து குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற கடுமையாக உழைத்தனர். எலான் மஸ்க் நிதியுதவி செய்தார். விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார். இந்நிலையில் தான் அவர்கள் 2 பேருக்கும் டொனால்ட் டிரம்ப் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார்.

"இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் வழி வகுக்கும் 'Save America' இயக்கத்திற்கு அவசியம்" என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News