உலகம்

ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்- 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயம்

Published On 2024-07-17 02:54 GMT   |   Update On 2024-07-17 02:54 GMT
  • எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது.
  • ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது.

கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான 'பிரெஸ்டீஜ் பால்கன்' ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.

இந்த எண்ணெய் கப்பல் டேங்கர் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.

எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் கூறுகையில், எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்தது. இருப்பினும், கப்பல் நிலைபெற்றதா அல்லது எண்ணெய் அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

இந்த கப்பல் 2007ல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் ஆகும். இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது. இது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் முக்கிய மையமாகும். பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் டுகும்-ன் பரந்த தொழில்துறை மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.

Tags:    

Similar News