உலகம்

நடுவானில் மோதிக்கொண்ட ராணுவ பயிற்சி விமானங்கள்... பைலட்டுகள் மரணம்

Published On 2023-03-07 14:19 GMT   |   Update On 2023-03-07 14:19 GMT
  • விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது
  • உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரோம்:

இத்தாலியின் ரோம் நகரின் அருகே இன்று விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. பின்னர் இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றின. இதில் இரண்டு பயிற்சி விமானத்திலும் பயணித்த விமானிகள் உயிரிழந்தனர். விமானம் மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது

இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறி உள்ளார். மேலும் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினர் மற்றும் சக விமானப்படை வீரர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

விமானிகள் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் U-208 என்ற இலகுரக, ஒற்றை என்ஜின் கொண்ட விமானம் ஆகும். இதில் விமானியுடன் சேர்த்து 5 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 285 கிமீ வேகத்தில் இந்த விமானத்தை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News