சிறையில் சின்மோய் தாஸ்.. சாப்பாடு கொடுக்க வந்த 2 இஸ்கான் சாமியார்களையும் கைது செய்த வங்கதேச போலீஸ்
- இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
- மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது
வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.