செய்திகள்

கலிபோர்னியாவில் 24 மணி நேரத்தில் 24 நிலநடுக்கங்கள்

Published On 2016-12-30 06:14 GMT   |   Update On 2016-12-30 06:14 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் சேக்ரா மென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

கலிபோர்னியாவின் அண்டை மாகாணமான நிவேடாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது. லேக் தகோயே பகுதியில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 5.6 ரிக்டர் வரை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. நில நடுக்கங்களால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Similar News