செய்திகள்

லெபனான் - சிரியா இடையே கைதிகள் பரிமாற்றம் - லெபனான் தளபதி விடுவிக்கப்பட்டார்

Published On 2017-08-02 08:13 GMT   |   Update On 2017-08-02 08:14 GMT
லெபனான் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே இன்று காலை நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில் லெபனான் ராணுவ தலைமை தளபதி இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டார்.
பெய்ருட்:

ஹெஸ்புல்லா (Hezbollah) என்பது லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். ஹெஸ்புல்லா என்பதற்கு அரபு மொழியில் கடவுளின் கட்சி என்று அர்த்தம். 1982-ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப் போராடவென உருவான இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியாகவும், ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது.

சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்துவரும் ஹெஸ்புல்லா இயக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இங்கிலாந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்துள்ளன.

பெரும்பாலும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு ஆதரவான இந்த இயக்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், அண்டைநாடான சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராடிவரும் மக்களை ஒடுக்க அங்கு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஷியா ஆதரவு நாடான ஈரான் பெரும் உதவிகளை செய்து வருகிறது.

இதேபோல், சிரியாவில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் அல்-நுஸ்ரா என்ற அமைப்பின் பெயரால் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் அல்-நுஸ்ரா மற்றும் ஹெஸ்புல்லா ஆகிய இருதரப்பினரும் எதிர்தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்து பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். பின்னர், சமாதான பேச்சின் மூலமாக கைதிகள் பரிமாற்றம் நடப்பதுண்டு.

அவ்வகையில், லெபனான் நாட்டின் ஹெஸ்புல்லா இயக்கத்தை சேர்ந்த மூன்று பிணைக்கைதிகளை அல்-நுஸ்ரா அமைப்பினர் இன்று அதிகாலை விடுவித்தனர். இதற்கு ஈடாக அல்-நுஸ்ரா தீவிரவாதிகள் மூன்றுபேர் விடுவிக்கப்பட்டனர்.

Similar News