உலகம் (World)
உக்ரைன் (கோப்பு படம்)

ரஷியாவுடனான போரில் 18 பத்திரிக்கையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர்- உக்ரைன் தகவல்

Published On 2022-04-04 21:52 GMT   |   Update On 2022-04-04 21:52 GMT
11 நாடுகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பல குற்றச் செயல்கள் இழைக்கப் பட்டுள்ளதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.
கீவ்: 

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24 முதல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து போர் செய்திகளை சேர்க்க சென்ற
18 பத்திரிக்கையாளர்களை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர், எட்டு பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மூன்று பத்திரிக்கையாளர்களை இன்னும் காணவில்லை எனவும் உக்ரைன் அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

உக்ரைன் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பல குற்றச் செயல்கள் இழைக்கப் பட்டுள்ளதாகவும்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் இறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உக்ரைன் கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப் பட்டுள்ளது.

Similar News