ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்த 29 தலைவர்கள் கொடூர கொலை
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
- வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
அக்கட்சி தலைவர்களின் வீடுகளுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடினர். பின்னர் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்கிராவில் பல அவாமி லீக் தலைவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டு சூறை யாடப்பட்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஷபிகுல் இஸ்லாம் ஷிமுல் எம்.பி.யின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் 4 பேர் இறந்தனர்.
போக்ராவில் உள்ள அவாமி லீக்கின் இளைஞர் பிரிவான ஜூபோ லீக்கின் 2 தலைவர்களின் உடல் களை கண்டெடுத்தனர். லால்மோனிர்ஹாட்டில், மாவட்ட அவாமி லீக் இணைப் பொதுச் செயலா ளர் சுமன் கான் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அங்கு 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.