காசா எல்லையில் இஸ்ரேல் தாக்குதல் - 4 குழந்தைகள் உயிரிழப்பு
- ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது தாக்கியது.
- 250 பேரை பணய கைதிகளாக கைப்பற்றி சென்றது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீன மருத்துவ துறை தெரிவித்து இருக்கிறது. இந்த தாக்குதலில் மேலும் 15 பேர், பெரும்பாலும் குழந்தைகள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாக குற்றம்சாட்டி இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் படைகள் ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. காசாவில் போராடி வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்கியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1200 பேரை கொன்று குவித்தனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மேலும், 250 பேரை பணய கைதிகளாக கைப்பற்றி சென்றது. இதன் காரணமாகத் தான் காசாவில் போர் தொடங்கியது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் இதுவரை குறைந்தது 44,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.