null
சீறி பாயும் குட்டி ராஜநாகத்தை ஆசுவாசப்படுத்தும் நபர்- வீடியோ வைரல்
- ராஜநாகத்தின் குட்டிகளிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்பார்கள்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்றாக ராஜநாகம் கருதப்படுகிறது. ஒரு வளர்ந்த ராஜநாகம் தன்னுடைய உடலில் 1 லிட்டர் அளவுக்கு விஷத்தை சேமித்து வைத்து கொள்ளும் தன்மை கொண்டது. ஒரு கடிக்கு 170-250 மிலி அளவுக்கு விஷத்தை செலுத்தும்.
இந்த விஷமே, 10 மனிதர்களையும், ஒரு யானையையும் கொல்ல போதுமானவை. ஆனால் வளர்ந்த நாகங்கள் எதிரியின் மீது எவ்வளவு அளவில் விஷத்தை செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டவை. அதன் குட்டிகளுக்கோ அத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. இதனால் ராஜநாகத்தின் குட்டிகளிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்பார்கள்.
இந்தநிலையில் குட்டி ராஜநாகத்தை ஒருவர் சாதாரணமாக கொஞ்சுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. கை விரல்களில் சுருண்டு கொண்டு சீறி பாயும் அந்த குட்டி பாம்பை ஆசுவாசப்படுத்தி தடவி கொடுக்கிறார். 14 லட்சம் பார்வைகளை கடந்து இது வைரலாகி வருகிறது.