மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தொடர் கார் குண்டு வெடிப்பு- 4 பேர் பலி
- இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
- குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மியான்மரின் கிழக்குப் பகுதியில் புத்த புத்தாண்டை மக்கள் நேற்று கொண்டாடினர். அப்போது, பொது மக்கள் கூட்டம் கூடியிருந்த பகோடா என்ற பகுதியில் நேற்று திடீரென தொடர் கார் குண்டுகள் வெடித்தது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021ம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு, நாடு கொந்தளிப்பில் உள்ளது. ராணுவம் மற்றும் ராணுவ எதிர்ப்பு போராளிகள் என இருதரப்பும் அடிக்கடி மோதி வருகின்றனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
மத்திய மியான்மரில் ராணுவ விமானத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சில நாட்களில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.