உலகம்

கியூபாவில் அடுத்தடுத்து இரண்டு சக்கி வாய்ந்த நிலநடுக்கம்

Published On 2024-11-11 01:06 GMT   |   Update On 2024-11-11 01:42 GMT
  • நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது.
  • ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கி.மீட்டர் தொலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது. மேலும் ஹோல்யின், குவான்ட்னாமோ போன்ற நகரிங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பிலோன் என்ற சிறிய கிராமத்தில் உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சிலமணி நேரத்தில் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவை கடுமையாக தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் கியூபாவை தாக்கியுள்ளது.

அக்டோபர் மாதம் இறுதியில் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் மக்கள் இருளில் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News