உலகம்

வங்கதேசத்தில் வேகமாக பரவும் டெங்கு.. ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு

Published On 2024-11-17 16:07 GMT   |   Update On 2024-11-17 16:07 GMT
  • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது.
  • டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது.

வங்கதேசத்தில் கொசுக்களால் பரவும் வைரல் காய்ச்சலான டெங்கு வேகமாக பரவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் முழுவதும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,389 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையின் மூலம், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் மொத்தம் 415 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இன்று காலை வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள புதிய நோயாளிகளில் 376 பேர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், டாக்கா பிரிவில் 391 பேரும், மைமென்சிங் பிரிவில் 44 பேரும், சட்டோகிராம் பிரிவில் 172 பேரும், குல்னா பிரிவில் 159 பேரும், ராஜ்ஷாஹி பிரிவில் 96 பேரும், ரங்பூர் பிரிவில் 19 பேரும், பரிஷால் பிரிவில் 123 பேரும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News