உலகம்

லண்டன் தெருக்களில் லுங்கியுடன் வளம் வந்த இளம்பெண்.. வைரல் வீடியோ

Published On 2024-05-25 11:15 GMT   |   Update On 2024-05-25 11:15 GMT
  • உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
  • . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Full View

பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

 

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.  

Tags:    

Similar News