எல்லா கண்களும் வைஷ்ணவ தேவி தாக்குதல் மீது: வைரலாகும் பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டா பதிவு
- ஜம்மு-காஷ்மீரில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.
- 9 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் ஷ்வ்கோரி கோவிலில் இருந்து வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பேருந்தில் 53 யாத்ரீகர்கள் சென்ற கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து போனி பகுதியில் உள்ள தெர்யாத் அருகே பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 41 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி "எல்லா கண்களும் வைஷ்ணவ தேவி தாக்குதல் மீது" என எழுத்தப்பட்ட போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.
காசாவின் ரபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரபாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்காலி முகாம் தீப்பிடித்து எரிந்து பலர் உயிரிழந்தனர்.
அப்போது எல்லா கண்களும் ரஃபா மீது என்ற வாசத்துடன் ஒரு படம் இணைய தளத்தில் வைரலாக பரவியது. இதற்கு இஸ்ரேல் அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டிருந்தது.
அந்த வகையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
ஹசன் அலியின் மனைவி சமியா இந்தியாவை சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.